நெல்லையில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்; 6 பேர் படுகாயம்...!
நெல்லை அருகே வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழப்பாட்டம் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன.
இந்த செங்கல் சூளையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் தொழிலாகளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் வடமாநில தொழிலாளர்கள் ரத்தன், ரமணி, அனில், நந்து, பிந்து மற்றும் ஒரு 10 மாத குழந்தை என்று மொத்தம் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து பாளையங்கோட்டை போலீசாருக்கு கொடுத்த தகவலின் போரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.