"பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்துவிட முடியாது" - ஜெயக்குமார் பேட்டி

பொய் வழக்கு போட்டு அதிமுகவை அழித்துவிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Update: 2022-03-14 11:22 GMT
திருச்சி,

நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருச்சி கன்டோன்மென்ட் (சட்டம்- ஒழுங்கு) காவல் நிலையத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமார் கூறியதாவது:-

அதிமுகவில் வலுவான ஒற்றை தலைமை இருப்பதால் தான் அதிமுகவினர் பொய் வழக்கு பதிவு செய்யப்படுவதாக கூறப்படும் கருத்து தவறானது. அதிமுகவினர் மீது திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்வதன் மூலம் அதிமுகவை அழிக்க நினைப்பது சாத்தியமில்லாதது.

கட்சிக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையிலேயே ஓபிஎஸ்-ன்  சகோதரரையே கட்சியை விட்டு நீக்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்