தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

Update: 2022-03-13 21:57 GMT
சென்னை,

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (திங்கட்கிழமை), 15-ந்தேதியும் (நாளை) வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் பனி மூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 16-ந்தேதி, 17-ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்