மோட்டார் சைக்கிள் மீது மோதியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

மோட்டார் சைக்கிள் மீது மோதியதை தட்டிக்கேட்ட கொத்தனாரை தாக்கிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-03-13 18:32 GMT
மோட்டார் சைக்கிள் மீது மோதியதை தட்டிக்கேட்ட கொத்தனாரை தாக்கிய 2 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
 
தாக்குதல்

ஏம்பலம் அருகே உள்ள தமிழக பகுதியான தென்னம்பாக்கத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 33). கொத்தனார். சம்பவத்தன்று இவர், ஏம்பலம்-மடுகரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்ப சென்றார்.
அப்போது பின்னால் வந்த கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ஏழுமலை (30), நல்லாத்தூர் பகுதியை சேர்ந்த வசந்த் என்ற வசந்தராஜா (20, குமரகுரு (30) ஆகியோர் பின்னால் வந்து மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளனர்.

2 பேர் கைது

இதை ரஜினி தட்டிக் கேட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரஜினியை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியால் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தமிழக பகுதியில் பதுங்கி இருந்த ஏழுமலை, வசந்தராஜா ஆகியோரை போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர்.
இதில் தடுக்கி விழுந்ததில் ஏழுமலையின் கை முறிந்தது. இருப்பினும் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கை முறிந்த ஏழுமலைக்கு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. மேலு இந்த வழக்கில் தொடர்புடைய குமரகுரு என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்