பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

கோட்டுச்சேரியில் பெண்களை கிண்டல் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-13 17:22 GMT
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் வேட்டைக்காரன் மேடு பகுதிகளில்  ரோந்து பணியில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது வேட்டைக்காரன் மேடு காளியம்மன் கோவில் அருகே, சாலையில் நடந்து சென்ற பெண்களை, இரட்டை அர்த்தத்தில் சினிமா பாட்டுப்பாடி வாலிபர் ஒருவர் கிண்டல் செய்து கொண்டு இருந்தார்.
இதை பார்த்த போலீசார்,   அந்த வாலிபரை  பிடித்து விசாரித்தபோது, வேட்டைக்காரன் மேடு, சுனாமி நகரைச் சேர்ந்த குட்டியாண்டி மகன் மணிவண்ணன் (வயது 24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்