இரண்டு நாட்களாக கொரோனா இறப்பு பதிவாகவில்லை என்பது மன நிம்மதியை தருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இரண்டு நாட்களாக கொரோனா இறப்பு பதிவாகவில்லை என்பது மன நிம்மதியை தருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இரண்டு நாட்களாக கொரோனா இறப்பு விகிதம் பதிவாகவில்லை என்பது மன நிம்மதியை தருகிறது. கொரோனா தொற்றின் பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.