பழனி அருகே யானை தந்தம் விற்பனை - 5 பேர் கைது

பழனி அருகே வனப்பகுதியில் இருந்து யானை தந்தத்தை கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-12 22:05 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. அடர்ந்த வனப்பகுதி என்பதால், பொதுமக்கள் உள்ளே செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 

இந்த நிலையில் புளியமரத்து செட் அருகே சந்தேகப்படும் விதமாக சுற்றித்திரிந்த 2 பேரை வனத்துறையினர் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரக பதிலளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் யானை தந்தத்தை விற்க வந்ததும், அவர்களிடம் தந்தத்தை வாங்க 3 பேர் வந்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அந்த 5 பேரையும் கைது செய்த வனத்துறைனர், அவர்களிடம் இருந்து யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்