செல்போன் பார்த்ததை கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை
செல்போன் பார்த்ததை கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
திருபுவனை
திருபுவனை அருகே சிலுக்காரிபாளையம் மயிலம் ரோட்டை சேர்ந்தவர் தங்கதுரை. ரோடு போடும் காண்டிராக்டர். இவரது மனைவி புஷ்பவதி. இவர்களுடைய மகள் ஷகி (வயது 16). பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று வந்த ஷகி, பாடம் படிக்காமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த புஷ்பவதி மகளை கண்டித்து செல்போனை பறித்துக் கொண்டார்.
இதனால் மனமுடைந்த ஷகி எலி மருந்தை தின்று விட்டார். இந்தநிலையில் திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரிடம், குடும்பத்தினர் விசாரித்தபோது எலி மருந்து தின்றது தெரியவந்தது.
உடனே கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஷகிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.