புதுவையில் கொரோனா பாதிப்பில்லை

புதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பில்லை

Update: 2022-03-11 12:40 GMT
புதுவையில் காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 433 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று கண்டறியப்படவில்லை. தற்போது 21 பேர் ஆஸ்பத்திரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 6 பேர் குணமடைந்தனர். குணமடைவோர் எண்ணிக்கை 98.80 சதவீதமாக உள்ளது.
நேற்று  முதல் தவணை தடுப்பூசியை 133 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,257 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 30 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை 16 லட்சத்து 2 ஆயிரத்து 392 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்