புறநகர் ரெயில்களில் சுற்றுலா சேவை பயணச்சீட்டு மீண்டும் அமல் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மூன்று வகையான பயணச்சீட்டுகளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை கோட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் சுற்றுலா சேவை பயணச்சீட்டு வழங்கும் முறையை தெற்கு ரெயில்வே மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் திருவள்ளூர்-சென்னை, செண்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, சென்னை கடற்கரை-வேள்ச்சேரி ஆகிய தடங்களில் செல்லும் ரெயில்களில் விருப்பம்போல பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள், 3 நாட்கள், 5 நாட்கள் என மூன்று வகையான பயணச்சீட்டுகளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.