இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1.168 ஆக உயர்ந்து ரூ.39,248 ஆக விற்பனை ஆகுகிறது.
சென்னை,
ரஷியா - உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரால் சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பங்குசந்தைகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தங்கம் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்தும் சற்று குறைந்தும் வருகிறது.
இந்நிலையில்,தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி,இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 அதிகரித்து,ரூ.4,906 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து,ஒரு சவரன் ரூ.39,248-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம், சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.