புதுச்சேரி காவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியீடு
புதுச்சேரியில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள எழுத்துத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று (வெள்ளிக்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டெக் ஹேண்ட்லர் பதவிக்கான எழுத்துதேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.
புதுச்சேரியில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள எழுத்துத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று (வெள்ளிக்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. டெக் ஹேண்ட்லர் பதவிக்கான எழுத்துதேர்வு தள்ளி வைக்கப்படுகிறது.
நுழைவுச்சீட்டு பதிவிறக்கம்
புதுச்சேரி அரசு நிர்வாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தேர்வு நடத்தும் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு வருகிற 19-ந் தேதி புதுவையில் 7 தேர்வு மையங்களில் நடக்கிறது. காவலர் உடல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் தங்களது தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வர்களுக்கான அறிவுறுத்தல்களை https://recruitment.py.gov.in/police என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு தள்ளி வைப்பு
மேலும் 20-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட டெக் ஹேண்ட்லர் (படகு ஓட்டுனர்) பதவிக்கான எழுத்துத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இந்த பதவிக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 0413-2233228 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.