தமிழகத்தில் புதிதாக 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 42,026 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், 129 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 354 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தலைநகர் சென்னையில் இன்று 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.