தி.மு.க. ராஜ்யசபை எம்.பி. என்.ஆர். இளங்கோவின் மகன் விபத்தில் உயிரிழப்பு
தி.மு.க. ராஜ்யசபை எம்.பி. என்.ஆர். இளங்கோவின் மகன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார்.;
சென்னை,
தி.மு.க.வை சேர்ந்த ராஜ்யசபை எம்.பி. என்.ஆர். இளங்கோவின் மகன் விழுப்புரம் அருகே கார் விபத்தில் உயிரிழந்து உள்ளார். புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும்போது அவரது கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ராகேஷ் (வயது 22) உயிரிழந்து உள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.