குமரி மீனவர்கள் 26 பேர் சிறைபிடிப்பு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக செசல்ஸ் தீவு, இந்தோனேஷியாவில் குமரி மீனவர்கள் 26 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் தங்கியிருந்து மீன்பிடித்து வருகிறார்கள். கடந்த மாதம் 17-ந் தேதி அந்தமானில் இருந்து குமரி மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 8 மீனவர்கள் ஒரு படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டனர். இந்தோனேஷியா எல்லையான கேம்பல்பட்டி என்னும் கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென படகு பழுதாகி உள்ளது. இதனால் காற்றின் திசைக்கு ஏற்றவாறு படகு சென்றது. அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட இந்தோனேஷியா கடற்படை அந்த விசைப்படகை சுற்றி வளைத்தது.
பின்னர் அவர்களை சிறைபிடித்து அந்த நாட்டின் கடற்கரை பகுதிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 8 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
செசல்ஸ் தீவில்...
இதேபோல் கேரள மாநிலத்தில் இருந்து குமரியை சேர்ந்த 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க குமரி மீனவர்கள் 21 பேர் உள்பட 33 பேர் கடந்த 7-ந் தேதி மீன்பிடிக்க சென்றிருந்தனர். பலத்த காற்றின் காரணமாக அவர்களது படகுகள் திசைமாறி செசல்ஸ் தீவின் எல்லைப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அந்த மீனவர்கள் செசல்ஸ் தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்து உள்ளனர். செசல்ஸ் தீவு, இந்தோனேஷியாவில் சிறைபிடிக்கப்பட்டு உள்ள மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.