வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி கொண்டுவர தமிழக அரசு புதிய கப்பல்கள் வாங்குகிறது

வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி கொண்டு வர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு புதிய கப்பல்கள் வாங்கப்படுகிறது.

Update: 2022-03-09 20:38 GMT
சென்னை,

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தலைமைச்செயலகத்தில், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மூலம் நிலக்கரி வெளிநாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் மற்ற துறைமுகங்களிலிருந்தும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இயக்கப்பட்டு வந்தது. இக்கப்பல்கள் இயக்க போதுமான திறன் குறைந்துவிட்ட காரணத்தால் 2017-2018-ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டு விட்டது.

புதிய கப்பல்கள்

எனவே, பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு மீண்டும் புதிய கப்பல்கள் தமிழக அரசு சார்பில் வாங்குவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச்செயலாளர் தீரஜ்குமார், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சிவ சண்முகராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்