கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் புதுச்சேரிக்கு மத்திய அரசு விருது
கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் புதுச்சேரிக்கு மத்திய அரசு விருது;
புதுச்சேரி
தீனதயாள் அந்த்யோதயா யோஜனா, தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்க திட்டமானது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரியாங்குப்பம், வில்லியனூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புற வறுமையை ஒழிப்பது மற்றும் சமூக அணி திரட்டல், மகளிர் சுய உதவி குழுக்கள், உற்பத்தி குழுக்களை உருவாக்குதல் ஆகும்.
இத்தகயை சமூக கட்டமைப்புகளின்படி அரியாங்குப்பம் வட்டார அளவிலான கூட்டமைப்பானது சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான ஆத்ம நிர்பார் சங்கேதன் என்ற தேசிய அளவிலான விருதை பெற்றுள்ளது. டெல்லியில் நடந்த சர்வதேச மகளிர் தினவிழாவில் மத்திய பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங் இந்த விருதினை வழங்கினார்.
புதுவை அரசின் ஊரக மேம்பாட்டு செயலாளர் ரவிப்பிரகாஷ் ஆலோசனையின்படி புதுவை மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாளர் லட்சுமணன், இணை வட்டார மேம்பாட்டு அலுவலர் கதிர்வேலு மற்றும் அரியாங்குப்பம் தொகுதி அளவிலான கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் இந்த விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசாக ரூ.1 லட்சத்தை பெற்றுக்கொண்டனர்.