பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எண் பட்டியல் நாளை வெளியீடு

பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு எண் பட்டியல் நாளை வெளியிடப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Update: 2022-03-09 15:25 GMT
சென்னை,

தமிழகத்தில் வரும் மே மாதம் 6-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை 10-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்புக்கு ஜூன் 17-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் வெளியிடுவது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியலை நாளை பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.  இந்த தேர்வெண் பட்டியலை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்