தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது;
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் 147- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு 1,903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 387- ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆகும். தலைநகர் சென்னையில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.