திண்டுக்கல்: பில்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டில் சீறி பாயும் காளைகள்..!

வடமதுரை அடுத்துள்ள பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிகட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது.

Update: 2022-03-09 05:14 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியில் ஸ்ரீ கதிர்நரசிங்க பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். முதலில் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

மேலும் செய்திகள்