தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 உயர்வு
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது.
சென்னை,
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.808 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது.
இந்த நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 71-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 568-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 56-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 448-க்கும் விற்பனை ஆனது.
இந்தநிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 392 ஆக உயர்ந்து ரூ 40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 49 உயர்ந்து ரூ 5,105க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ1.60 காசு உயர்ந்து ரு77.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.