மதுரை சின்னம்மன் கோவில் திருவிழா; களைகட்டும் ஜல்லிக்கட்டு போட்டி
ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்துள்ளனர்.
மதுரை,
மதுரை பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டியில் சின்னம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு போட்டி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுடன் போட்டி கலைகட்டி வருகிறது.
சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்.இ.டி. டிவி, பிடிட்ஜ், வாஷிங் மிஷின், தங்கக்காசு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். கொரோனா பரிசோதனை சான்று சரிபார்த்த பிறகே வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.