“தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை” - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுத்து வருவதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட பண்ணை வளாக கட்டடத்தை மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், மத்திய அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதியும், வெளியுறவுத்துறை மந்திரியை தொடர்பு கொண்டு பேசியும் வருகிறார் என தெரிவித்தார். வெகு சீக்கிரத்தில் தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.