மருத்துவ படிப்புக்கான 2 ம் கட்ட கலந்தாய்வு பட்டியல் சென்டாக் வெளியிட்டது
மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு பட்டியல் சென்டாக் வெளியிட்டது;
புதுச்சேரி
மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த மாணவர் சேர்க்கையை சென்டாக் நடத்தி வருகிறது. ஏற்கனவே நீட் தேர்வு அடிப்படையிலான படிப்புகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 2-வது கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியானவர்களின் பட்டியலை சென்டாக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு, நிர்வாகம், சிறுபான்மையினர் இடஒதுக்கீடுகளுக்கான மாணவர்களின் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்களுக்கும் தனித்தனியே குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளது.