நகைக்கடன் தள்ளுபடி- சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு ஆணை
நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விபரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னை,
கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை கூட்டுறவு சங்ககளில் 40 கிராம் வரை நகை வைத்திருந்தவர்களின் நகை கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்த நகைக்கடன் தள்ளுபடிக்கு 13,00,000 லட்சம் பேர் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி பெற அனுமதிக்கப்பட்ட நபர்களின் விபரங்களை சிறப்பு தணிக்கை செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த சிறப்பு தணிக்கையானது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கூட்டுறவு சங்ககளிலும் அயல் மாவட்ட தணிக்கையாளர்கள் மூலம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.