192 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் உள்பட 192 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கிய போது, அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது. இதனால், விமானம், ரெயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய போது, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, மீண்டும் ரெயில்வே நிர்வாகம் ரெயில் சேவைகளை இயக்க தொடங்கியது.
ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கட்டுப்பாடுகளுடன் ரெயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளிலும் முழுமையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு சில ரெயில்கள் படிப்படியாக முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.
முத்துநகர், நெல்லை, பாண்டியன்
ஆனால், தென்மாவட்ட ரெயில்களில் எதுவும் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம், தென்மாவட்ட ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட வேண்டும் என தொடர்ந்து பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், வருகிற 10-ந்தேதி முதல் தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் 192 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் படிப்படியாக மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை ரெயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும், சென்டிரல்-யஸ்வந்த்பூர் (12292), சென்டிரல்-ஹுப்ளி (17314) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 10-ந்தேதியில் இருந்தும், மலைக்கோட்டை (வண்டி எண்: 126530), எழும்பூர்-சேலம் (22153), எழும்பூர்-மதுரை (22623) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 16-ந்தேதியில் இருந்தும், எழும்பூர்-நாகர்கோவில் (12667), முத்துநகர் (12693), உழவன் (16865) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்தும், நெல்லை (12631), கன்னியாகுமரி (12633), பாண்டியன் (12637), பொதிகை (12661), ராமேசுவரம் (22661) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏப்ரல் மாதம் 16-ந்தேதியில் இருந்தும் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.
திருச்செந்தூர், வைகை, குருவாயூர்
எழும்பூர்-கொல்லம் (16101), எழும்பூர்-திருச்செந்தூர் (16105), எழும்பூர்-காரைக்கால் (16175), சிலம்பு (16181), அனந்தபுரி (16723), பல்லவன் (12605), வைகை (12635), எழும்பூர்-புதுச்சேரி (16115), எழும்பூர்-குருவாயூர் (16127), எழும்பூர்-மங்களூரு (16159), சோழன் (22675), அந்யோதயா (16191), ஏலகிரி (16089,16090), கோவை இண்டர்சிட்டி (12679) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மே மாதம் 1-ந்தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.
மேலும், ஏற்காடு (22649), தாம்பரம்-நாகர்கோவில் (22657) சென்டிரல்-மதுரை (20601) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 16-ந்தேதியில் இருந்தும், சார்மினார் (12759), சர்கார் (17643) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 20-ந்தேதியில் இருந்தும், நீலகிரி (12671), சேரன் (12673), ஆலப்புழா (22639) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்தும், லால்பாக் (12607), மைசூரு (12609), பிருந்தாவன் (12639), கோவை (12675), வெஸ்ட் கோஸ்ட் (22637), பினாகினி (12712), சப்தகிரி (16057) என தெற்கு ரெயில்வேக்குட்பட்ட திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்பட 6 ரெயில்வே கோட்டத்திலும் மொத்தமாக 192 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.