மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது...!
ஆலங்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பத்துதாக்கை பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 55). இவர் தனது மகள் வீட்டில் தனியாக இருந்தபோது கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமி சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிறுமியை மருத்துவமனைக்கு அவரது தாய் அழைத்து சென்று உள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயர், ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
புகாரை தொடர்ந்து தந்தை சேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.