ஆழித்தேர் கட்டுமானப் பணிகள்கள்; கலெக்டர் ஆய்வு...!
தியாகராஜ சுவாமி கோவிலில் வரும் 15-ம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தேர் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி கோவிலில் வரும் 15-ம் தேதி ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் தேர் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் மற்றும் பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
இது தொடர்பாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் கூறியதாவது:-
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித் தேரோட்டமானது வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஒர் முன்னேற்பாடு கூட்டம் நடத்தப்பட்டு அனைத்து அலுவலர்களுக்கும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் ஆழித்தேரோட்ட முன்னேற்பாடு பணிகளை கள ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கமலாலயகுளம் தென்கரை பகுதி சீரமைப்பு பணிகள் நிறைவுற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தேரோட்டத்தையொட்டி நடைபெற்று வரும் சாலை சீரமைப்புபணிகள் விரைவில் நிறைவுபெறும்.
இத்தேரோட்டத்தினையொட்டி அரசுத்துறை அலுவலர்கள், போலீசாருக்கு பாதுகாப்பு மற்றும் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.