3 மாவட்டங்களில் தலா ஒருவர் பலி தமிழகத்தில் 196 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதிக்கு பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 200-க்கு கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் நேற்று 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 50 ஆயிரத்து 113 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 117 ஆண்கள், 79 பெண்கள் என மொத்தம் 196 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 62 பேரும், கோவையில் 25, செங்கல்பட்டில் 20, திருப்பூரில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்குக்கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
12 வயதுக்கு உட்பட்ட 36 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 40 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 35 லட்சத்து 36 ஆயிரத்து 149 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 51 ஆயிரத்து 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 814 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 407 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 141 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெறுகின்றனர்.
3 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, மயிலாடுதுறை, திருச்சியில் தலா ஒருவர் உயிரிழந்தனர். 35 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 15 பேர் இத்தொற்றால் உயிரிழந்து உள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 554 பேர் மீண்டு ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 2 ஆயிரத்து 770 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.