லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
நெல்லிதோப்பு சிக்னல் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுவை நெல்லித்தோப்பு சிக்னல் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனே உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று லாட்டரி சீட்டு விற்பனை செய்த கடலூரை சேர்ந்த வரதராஜ் (வயது 48), சண்முகம் (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், செல்போன்கள் மற்றும் 12 ஆயிரத்து 430 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.