ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக அழைத்து வருவதே மத்திய அரசின் நோக்கம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன்

ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறினார்.

Update: 2022-03-06 07:29 GMT
சென்னை,

சென்னையில் மத்திய அரசின் மக்கள் மருந்தகம் சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமை மத்திய இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து மீட்பு தினந்தோறும் 4 ஆயிரம் மாணவர்கள் மீட்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாணவரையும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதே மத்திய அரசின் நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. 

உக்ரைனில் இருந்து கிட்டத்தட்ட 12 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் பேர் இந்தியா வந்துள்ளனர். தமிழ்நாடு அமைத்துள்ள குழு இதுவரை எத்தனை மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு வந்துள்ளது? என கேள்வி எழுப்பினார்.

மேலும் நீட் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இணை மந்திரி எல்.முருகன் பதில் அளித்தார். 

அவர் கூறுகையில், எல்லாவற்றிற்கும் தகுதி தேர்வு என்பது ஒன்று உண்டு. அதன் அடிப்படையிலேயே நீட் தேர்வு உள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் வந்த பிறகு அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பேர் மருத்துவம் படித்து வருகின்றனர் என்று கூறினார்.

மேலும் செய்திகள்