உடல் நலக்குறைவால் கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை...!

உடல் நலக்குறைவால் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Update: 2022-03-05 10:49 GMT
பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பொன்னேரிபட்டி அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி (வயது 79). இவரது மனைவி காளியம்மாள்(70). 

இவர்கள் இருவரும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல் நிலை சரியாகாததால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பெரியசாமியும் அவரது மனைவி காளியம்மாளும் வெகுநேரமாக வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்

அப்போது பெரியசாமியும் அவரது மனைவி காளியம்மாளும் தனித்தனியாக தூக்கு தொங்கியவாரு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குவந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் தம்பதியினரின் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்