ஒர்க் ஷாப்பில் தீ விபத்து; எரிந்து நாசமான கார்கள்...!
கார் ஒர்க் ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கார்கள் எரிந்து நாசமாகி உள்ளது.
மதுரை,
மதுரை மாவட்டம் பாண்டி கோவில் பிரதான சாலையில் கார் ஒர்க் ஷாப் ஒன்று உள்ளது. இந்த ஒர்க் ஷாப்பில் ஏராளமாக கார்களை பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைத்துயிருந்தனர்.
இந்த நிலையில் ஒர்க் ஷாப்பில் திடீர் என்று தீ பற்றி உள்ளது. இதனை அறிந்த கடை உரிமையார் மற்றும் பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.
தீ மளமளவென எரிந்ததால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்து. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர்.
ஆனால் அதற்குள் ஒர்க் ஷாப்பில் நின்று கொண்டிருந்த கார்க் முழுவதும் சோதம் அடைந்தது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.