கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் பொறுப்பில் இருந்து விடுவிப்பு- துரைமுருகன் அறிவிப்பு

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.சுரேஷ்ராஜனை, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

Update: 2022-03-04 16:08 GMT
சென்னை, 

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.சுரேஷ்ராஜனை, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த ஆர்.மகேஷ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், அவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்