இருசக்கர வாகன விபத்தில் டி.எஸ்.பி உயிரிழப்பு...!

இருசக்கர வாகன விபத்தில் திருமானூர் போலீஸ் நிலைய சிறப்பு டி.எஸ்.பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Update: 2022-03-04 03:13 GMT
திருமானூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு டி.எஸ்.பியாக பணிபுரிந்து வந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி முத்து லெட்சுமி.  இவர்களுக்கு நிவேதா(23) என்ற மகளும், விக்னேஷ்(19) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையல் பாலசுப்பிரமணியன் நேற்று, இரவு பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

இவர்  அரியலூர் - தஞ்சாவூர்  நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த ஒரு சைக்கிள் மோதி கீழே விழுந்துள்ளார். அப்போது அங்கு வந்த லாரி ஒன்று பாலசுப்பிரமணியன் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டி.எஸ்.பி பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருமானூர் போலீசார், பாலசுப்பிரமணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

விபத்தில் டி.எஸ்.பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்