பெண்கள் முற்றுகை

யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-03-03 21:06 GMT
திருமங்கலம், 
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் விருசங்குளம். இங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் அனை வருக்கும் வேலை வழங்காமல் ஒரு சிலருக்கு மட்டும் வேலை வழங்குவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அனைவருக்கும் ஒரே வேலைவாய்ப்பு திட்ட பணிகளை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து திருமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் கைலாசம் முற்றுகையிட்ட பெண்களை அழைத்து அனைவருக்கும் ஒரே  வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்