இலவச அரிசி பெறாதவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து குடிமைப்பொருள் வழங்கல்துறை எச்சரிக்கை

இலவச அரிசி பெறாதவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறை எச்சரித்துள்ளது.

Update: 2022-03-03 15:06 GMT
புதுச்சேரி
இலவச அரிசி பெறாதவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படும் என்று குடிமைப்பொருள் வழங்கல் துறை எச்சரித்துள்ளது.
புதுவை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகார துறை இயக்குனர் சக்திவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவச அரிசி

புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்படி 2022-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய 2 மாதத்துக்கான இலவச அரிசி வழங்கப்பட உள்ளது. அதாவது புதுச்சேரியில் உள்ள அனைத்து சிவப்பு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் நபர் ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் அனைத்து பகுதிகளிலும் இலவசமாக அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது.
ஆகவே சிவப்பு ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் வழக்கம்போல் தங்கள் பகுதிகளில் உள்ள அரசு, தனியார் பள்ளிக்கூடங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் இலவச அரிசியை  வருகிற  20-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ரேஷன் கார்டுகள் ரத்து

அதன்படி இலவச அரிசி பெற தவறினால் அவர்களின் ரேஷன்கார்டுகள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அரிசி வினியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வருவதோடு சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்