போலி குடும்ப அட்டைகளை களைய அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.

Update: 2022-03-02 16:26 GMT
சென்னை,

போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், 

தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்களை பெறவில்லை என உறுதியாகும்பட்சத்தில், நியாய விலைக்கடை பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறந்தவரின் பெயரை நீக்காமல் பொருட்களை பெறும் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்