மூதாட்டி வீட்டில் ரூ.2 லட்சம் திருடிய சிறுவன் கைது..!

நெல்லை அருகே மூதாட்டி வீட்டில் ரூ. 2 லட்சம் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-02 13:17 GMT
நெல்லை, 

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி மனைவி செல்வமணி (92). சம்பவத்தன்று இவரது வீட்டில் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மாயமாகி இருந்தது. அதனை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த சிறுவனை இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்