தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ரூ.120 கோடி வாடகை வசூல் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ரூ.120 கோடி வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-02 11:24 GMT
சென்னை,

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கணினி வழியாக திருக்கோயில்களின் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் 01.07.2021 முதல் நாளது தேதி வரை ரூ.120 கோடியே 18 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.4.28 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.3.23 கோடியும், சென்னை, பூங்காநகர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ரூ.2.05 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.1.79 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் ரூ.1.43 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ரூ.1.39 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி கோவிலில் ரூ.1.26 கோடியும், திருவாரூர், திருத்துறைப்பூண்டி பிறவிமருந் தீஸ்வரர் கோவிலில் ரூ.1.24 கோடியும், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ரூ.1.16 கோடியும், காஞ்சிபுரம் கோவூர் சுந்தரேசுவரர் சுவாமி கோவிலில் ரூ.1.15 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்