வரும் 26, 27 -ஆம் தேதிகளில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் துபாய் பயணம்

192 நாடுகள் பங்கேற்கும் தொழில் முதலீட்டு கண்காட்சியில் பங்கேற்பதற்காக மு.க ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளார்.

Update: 2022-03-02 10:39 GMT
சென்னை,

தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 26 மற்றும் 26 ஆம் தேதிகளில் துபாய் சுற்றுப்பயணம் செல்கிறார்.  192 நாடுகள் பங்கேற்கும் தொழில் முதலீட்டு கண்காட்சியில் பங்கேற்பதற்காக மு.க ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளார்.  

இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசு சார்பாக கைத்தறி, விவசாயம், தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கு அமைய உள்ளது.  தமிழ்நாடு சார்பாக அமைக்கப்பட உள்ள காட்சி அரங்கில் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.  தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதலீட்டை ஈர்க்க முதன் முறையாக வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல உள்ளார்.  

மேலும் செய்திகள்