அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு
சேலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம்,
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறி, அதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையொட்டி சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைப்பு செயலாளர் செம்மலை உள்பட 12 பேர் மீது சட்ட விரோதமாக ஒரே இடத்தில் கூடுதல், சாலையை மறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி
இதேபோல விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்யப்போவதாக தகவல் பரவியது. இதனால் திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் இரவு அ.தி.மு.க.வினர் இரவில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அம்மன் கே.அர்ச்சுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார், தாமோதரன், சூலூர் கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகிய எம்.எல்.ஏ.க்கள் உள்பட 14 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.