கொலை, கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது 150 கிராம் கஞ்சா பறிமுதல்
கொலை, கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது 150 கிராம் கஞ்சா பறிமுதல்
திருபுவனை
கஞ்சா விற்றதாக கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளிட்ட 27 வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்றவர்
திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, அஜய்குமார் ஆகியோர் சன்னியாசிகுப்பம்-கொத்தபுரிநத்தம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். சந்தேகமடைந்த போலீசார், அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 150 கிராம் கஞ்சா இருப்பதை கண்டுபிடித்தனர்.
27 வழக்குகள்
இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், புதுச்சேரி பெரிய காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்த சுகன் என்ற பிரதீப் (வயது 28) என்பது தெரியவந்தது.
ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 27 வழக்குகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததுடன் கஞ்சாவையும் கைப்பற்றினர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
===