இந்தியா முழுமைக்கும் திராவிட மாடல் கோட்பாடு புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் பேச்சு
மு.க.ஸ்டாலினின் சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார். நிகழ்ச்சியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்று கூறினார்.
சென்னை,
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தனது வாழ்க்கை வரலாற்றை ‘உங்களில் ஒருவன்' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.
முதல் பாகமாக உருவாகியுள்ள இந்த புத்தகத்தில், தனது திருமண வாழ்க்கை வரை நடைபெற்ற சம்பவங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுத்து வழங்கியுள்ளார்.
ராகுல்காந்தி வெளியிட்டார்
“உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மைய கூட்ட அரங்கத்தில் நேற்று பிற்பகல் விமரிசையாக நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார்.
தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. அனைவரையும் வரவேற்றார். “உங்களில் ஒருவன்” புத்தகத்தின் முதல் பிரதியை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டார். அவரிடம் இருந்து கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.
கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். முன்னதாக, சிறப்பு விருந்தினர்களுக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிறைவாக, சிறப்பு விருந்தினர் களுக்கு நினைவு பரிசுகளை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முயன்று பார்ப்பேன்
தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு கோடிக்கணக்கான தி.மு.க. தொண்டர்களின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழுவில் பேசுகின்றபோது குறிப்பிட்டு சொன்னேன். கருணாநிதி போல எனக்கு எழுத தெரியாது, அவர் போல் பேசவும் தெரியாது. ஆனால், அனைத்தையும் நான் முயன்று பார்ப்பேன் என்று அப்போது நான் குறிப்பிட்டேன்.
அப்படி நான் செய்த முயற்சிதான் இந்த புத்தகம்.தி.மு.க.வின் தலைவர் என்ற பெருமையால் அல்ல. தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற கர்வத்தால் அல்ல. எப்பொழுதும், என்றென்றும், எந்த சூழ்நிலையிலும், எந்த பொறுப்பில் இருந்தாலும் உங்களில் ஒருவனாகத்தான் நான் இருக்க வேண்டும். அதை எப்போதும் இந்த ஸ்டாலின் மறக்கமாட்டான். அதன் அடையாளமாகத்தான் என் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு உங்களில் ஒருவன் என்ற பெயரை நான் சூட்டியிருக்கிறேன்.
முதல்-அமைச்சர் நாற்காலி
தலைவர் கருணாநிதி உட்கார்ந்த நாற்காலியில் நான் உட்காருவேன் என்று நினைத்துகூட பார்த்தது கிடையாது. முதல்-அமைச்சராக இருந்த அண்ணா, அவரது காரை அனுப்பி என்னை அழைத்துவர கூறினார். நானும் ஒரு காலத்தில் அந்த நாற்காலியில் உட்காருவேன் என்று அப்போது நினைக்கவே இல்லை. பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவனாக அண்ணா பிறந்தநாளை நடத்தியபோது, அதில் அண்ணன் துரைமுருகனை பேச வைத்து அழகுபார்த்தவன் நான். அவர் இன்று கழகத்தின் பொதுச் செயலாளர், நான் தலைவர்.
1953-ம் ஆண்டு நான் பிறந்தபோது, குலக்கல்வியை எதிர்த்து போராடினோம். இன்று நீட் தேர்வை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். பள்ளி மாணவனாக நான் இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினோம். இந்தி ஆதிக்கத்தை இன்றைக்கும் நாம் எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.
தனி மனிதனல்ல
இந்த புத்தகத்தில் நான் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மனிதர்களின் முகங்கள் அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. புத்தகத்தை படிக்கும்போது அதை நீங்கள் உணர்வீர்கள். நினைவில் இருக்கும் பெயர்களைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். என்னுடன் பயணப்பட்ட மனிதர்கள், எனக்கு துணையாக வந்தவர்கள் கூட்டம் பெரியது. நான் தனிமனிதனல்ல-ஒரு கூட்டம் என்பதை இதன் மூலம் நீங்கள் அறியலாம். இது கொள்கை கூட்டம் என்பதையும் அறியலாம்.
சுயமரியாதை கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் பேரறிஞர் அண்ணா, இயக்கத்தை வழிநடத்துவதில் தலைவர் கருணாநிதி, மொழி உரிமையில் பேராசிரியர் க.அன்பழகன், இந்த நால்வரின் நிழற்குடையில் நிற்பவன் நான். இவர்கள்தான் என்னைச் செதுக்கிய சிற்பிகள்.
தத்துவத்தின் அடையாளம்
இந்த நால்வரும் தனிமனிதர்கள் அல்ல. தத்துவத்தின் அடையாளங்கள். அத்தகைய தத்துவத்தின் அடையாளமாகவே நான் இருக்க விரும்புகிறேன். எனது தத்துவம் என்பதற்கு ‘திராவிட மாடல்' என்று பெயர். ‘மாடல்' என்பது ஆங்கிலச் சொல்தான். அதைத் தமிழில் சொல்வதாக இருந்தால் ‘திராவிடவியல் ஆட்சிமுறை'தான் எனது கோட்பாடு. அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும். கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், சமூக மேம்பாட்டில், இந்த நாடு ஒரு சேர வளர வேண்டும். அந்த வளர்ச்சி என்பது அனைத்து சமூகங்களையும் மேம்படுத்துவதாக அமைய வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் வளர்ச்சியாக இல்லாமல், அனைத்து மாவட்டங்களும் சீராக வளர வேண்டும். வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பால் பேதமற்ற, ரத்தபேதமற்ற சமூகமாக நமது சமூகம் மாற வேண்டும். ‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதே இந்த திராவிடவியல் கோட்பாடு ஆகும்.
சுயாட்சி தன்மை
அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் ஆகும். அதைத்தான் அரசியல் அமைப்பு சட்டமும் சொல்கிறது. அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இந்த மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும் என்பதுதான் திராவிடவியல் கோட்பாடு.
இந்த திராவிடவியல் கோட்பாட்டை, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ராகுல்காந்தியும், பினராயி விஜயனும், உமர் அப்துல்லாவும், தேஜஸ்வி யாதவும் இங்கே அழைக்கப்பட்டுள்ளார்கள்.
ராகுல்காந்தி பேச்சு
இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் எழுந்து நின்று ராகுல்காந்தி, “இந்தியா மாநிலங்களால் உருவானது” என்றும்; “பா.ஜ.க. ஒருபோதும் தமிழகத்தை ஆளமுடியாது” என்றும் பேசியது, அவர் திராவிடவியல் கோட்பாட்டை முழுமையாக உள்வாங்கியவர் என்பதை உணர்த்துகிறது.
கூட்டாட்சி தத்துவத்தின் நெறிமுறைகள் குறித்து ராகுல்காந்தி அதிகம் பேசத் தொடங்கி இருப்பதற்கு நான் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும்.
அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்
நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு, செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு, இன்றைய தினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக உருக்குலைக்கப்படுவதை தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்.
மாநிலங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக பறிபோவதன் காரணமாக, அந்த மாநில மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுகிறது. அதனை அனைத்து கட்சிகளும் உணர்ந்துள்ளன. ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாறிவிட்டது. அதேபோல், இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல், சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும். இதற்காக அகில இந்திய அளவிலான சமூகநீதி கூட்டமைப்பை தி.மு.க. சார்பில் உருவாக்கி, அனைத்து அகில இந்திய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன்.
திராவிடவியல் கோட்பாடு
இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உறுதியளிக்கிறேன். அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.
என்னுடைய வாழ்க்கையை பொது வாழ்வுக்காக அர்ப்பணித்துள்ளேன். எப்போதும் அதுபோல் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன். என்னுடைய பேச்சை முடிக்கும் முன்பு, இந்த மேடையில் இருக்கும் தலைவர்களுக்கு மட்டுமல்ல, மதசார்பற்ற தன்மையின் மதிப்புகளை மதிக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நமது இந்திய ஒன்றியம் பிரிவினை சக்திகளால் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவர்களை தோற்கடித்து, இந்தியாவின் அடிப்படை கொள்கைகளை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகன் சபரீசன், சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு, மறைந்த முன்னாள் மத்திய மந்திரி முரசொலிமாறனின் மனைவி மல்லிகா மாறன், முரசொலி ஆசிரியர் செல்வம், சபாநாயகர் அப்பாவு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன் எம்.பி., தயாநிதிமாறன் எம்.பி., சு.திருநாவுக்கரசர் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், டி.கே.ரங்கராஜன் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், பேராயர் எஸ்றா சற்குணம், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நடிகர்கள் ராஜேஷ், நாசர், பிரபு, பார்த்திபன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி, பூம்புகார் பதிப்பக நிர்வாகிகள் ராஜா சுந்தர் சிங், சாம் பிரசாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.