மாணவியின் கன்னத்தில் கிள்ளிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியின் கன்னத்தில் கிள்ளிய கணித ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் லிங்கநாயக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சேரன் (வயது 50). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி வகுப்பறையில் 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை நோட்டில் கணக்கு போடுமாறு கூறியுள்ளார். அப்போது அந்த மாணவி நோட்டில் கணக்கு போட்டு சேரனிடம் காண்பித்துள்ளார். அந்த கணக்கு தவறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர் வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகள் முன்னிலையில் அந்த மாணவியின் கன்னத்தில் கிள்ளி முதுகில் தட்டி உள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
கைது
இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், ஆசிரியர் சேரனை அழைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வகுப்பறையில் மாணவியின் கன்னத்தில் கிள்ளி முதுகில் தட்டியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சேரனை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.