கலெக்டர் அலுவலகம் முன் தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ...

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-02-28 11:13 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவர் தனது மனைவி மற்றும் தாய் உடன் இந்த பகுதில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றார். இந்த நிலையில் அந்த பகுதியில் அமைந்து உள்ள மர பட்டறையால் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளார்.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகின்றது. அதனால் ஆத்திரம் அடைந்த தெய்வ சிகாமணியின் மனைவி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் விரைந்து வந்து அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்