ரஷியாவின் பிடியில் சென்றுள்ள கார்கிவ் பகுதியில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்டுத்தர வேண்டும்
உக்ரைனின் கார்கிவ் பகுதியில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்டுத்தரக்கோரி சென்னை எழிலகத்தில் நேற்று ஏராளமான பெற்றோர் குவிந்தனர்.
சென்னை,
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்த நாட்டின் முக்கிய நகரங்களை பிடித்து தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வருகிறது. இந்த போரின் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நேற்று உக்ரைனின் 2-வது பெரிய நகரான கார்கிவை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.
இந்த நகரில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டுத்தருமாறு மாணவர்களின் பெற்றோர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு உதவி செய்யும் வகையில், தமிழக அரசு சார்பில் சென்னை எழிலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நேரில் கோரிக்கை
இந்த நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோர் நேற்று எழிலகத்திற்கு வந்தனர். அங்கு, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குனர் ரமேஷிடம், கார்கிவ் பகுதியில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்கள் 70 பேரின் முழு விவரங்களை தெரிவித்து, அவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு நேரில் கோரிக்கை வைத்தனர்.
குறிப்பாக, தங்கள் பிள்ளைகள் கார்கிவ் பகுதியில் பாதாள அறைகளில் இருப்பதாகவும், அங்கு தற்போது உணவும், தண்ணீரும் கிடைக்கவில்லை என்றும் கூறினர்.
மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டால் அவர்களை தொடர்பு கொள்வது கூட சிரமமாகிவிடும் என கவலை தெரிவித்த அவர்கள், எனவே அனைவருக்கும் முதலில் உணவு கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து, அவர்களை விரைந்து தாயகம் மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
உணவு கிடைப்பதற்கான ஏற்பாடு
இந்த பெற்றோருக்கு பதில் அளித்து அதிகாரி ரமேஷ் கூறியவதாவது:-
தற்போது உக்ரைனில் உச்சகட்ட போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, அங்கு இப்போது தரைவழி போக்குவரத்து மேற்கொள்வது மிகவும் சிரமம். அங்கு சிக்கி உள்ள பொதுமக்களுக்கு தற்போது செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் குருத்வாரா அமைப்பினர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் உங்கள் பிள்ளைகள் தங்கி இருக்கும் இடத்தையும் தெரிவித்து உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்.
பொதுவாக போர் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக குறிப்பிட்ட சில மணி நேரம் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், உக்ரைனில் போர் தொடங்கியது முதல் இதுவரை இது போன்ற தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை.
துரிதமான மீட்பு நடவடிக்கை
எனவே, இத்தகைய போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் நேரத்தில்தான் இந்திய தூதரகம் சார்பில் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். அதுவரை தாங்கள் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும். அங்குள்ள முகவர்களின் பேச்சை கேட்டு தன்னிச்சையாக பஸ் அல்லது ரெயில் மூலம் பயணங்களை மேற்கொள்வது மிகவும் ஆபத்தாக அமைந்துவிடும்.
ஆகவே, இந்திய தூதரகம் மற்றும் பல்கலைக்கழகங்களின் அறிவுரைப்படி, அவர்களின் உதவியுடன் பயணங்களை மேற்கொண்டு அண்டை நாட்டு எல்லைகளை அடைந்து விமானம் மூலம் தாயகம் திரும்பலாம். அதுவரை உங்கள் பிள்ளைகளுக்கு தைரியமூட்டிக்கொண்டிருங்கள். ரஷியா வழியாகவும் இந்தியர்களை மீட்க இந்திய தூதரகம் மூலம் ரஷியாவிடம் பேசப்பட்டுள்ளது. எனவே, உங்கள் குழந்தைகளும் பாதுகாப்பாக தாயகம் திரும்ப அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பெற்றோருக்கு உறுதி அளித்தார்.