சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி விழா

புதுவை சிவன் கோவில்களில் நாளை மறுநாள் மகா சிவராத்திரி விழாவையொட்டி இரவு முழுவதும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Update: 2022-02-27 18:01 GMT
புதுவை சிவன் கோவில்களில் நாளை மறுநாள் மகா சிவராத்திரி விழாவையொட்டி இரவு முழுவதும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மகா சிவராத்திரி
மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே மகா சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) புதுவையில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. 
புதுவை காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில், பாரதி வீதி காமாட்சி அம்மன் கோவில், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், பாகூர் மூலநாதர், முதலியார்பேட்டை முத்துக்குமாரசுவாமி கோவில், காராமணிக்குப்பம் சிவசுப்பிரமணிய கோவில் உள்பட நகர மற்றும் கிராமப்புறத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
ஆன்மிக நிகழ்ச்சிகள்
நாளை மறுநாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சிவன் கோவில்களில் 4 கால சிறப்பு பூஜை நடக்கிறது. மகா சிவராத்திரி விழாவில் இரவு முழுவதும் பக்தி சொற்பொழிவு, மங்கள இசை, பரத நாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. கோவில்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்