தமிழகத்தில் புதிதாக 439 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.;

Update: 2022-02-27 14:29 GMT
சென்னை, 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 60 ஆயிரத்து 707 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் புதிதாக 439 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,003 ஆக உயர்ந்துள்ளது.  அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில்  1,209 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,04,611 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது 6 ஆயிரத்து 393 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்