ஆரல்வாய்மொழி அருகே லாரி- டெம்போ மோதல்; கோழிக்கடைக்காரர் பலி - 7 பேர் படுகாயம்
ஆரல்வாய்மொழி அருகே லாரியும், டெம்போவும் நேருக்கு, நேர் மோதிய விபத்தில் கோழிக்கடைக்காரர் பலியானார். மேலும் 7 ேபர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது48). இவர் அந்த பகுதியில் கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். தனது கடைக்கு தேவையான கோழிகளை எடுப்பதற்காக இவரும், கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (27) என்பவரும் டெம்போவில் பணக்குடிக்கு சென்றனர். ெடம்போவை ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்த எப்சன் ராஜ் (27) என்பவர் ஓட்டி சென்றார்.
அவர்கள் கோழிகளை வாங்கிவிட்டு நேற்று அதிகாலை 2.30 மணியளவில் நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர். ஆரல்வாய்மொழி அருகே உள்ள வெள்ளமடம் கிறிஸ்துநகர் பகுதியில் வந்த போது எதிரே திருவட்டாரில் இருந்து செங்கல் ஏற்றுவதற்காக ஆரல்வாய்மொழி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.
எதிர்பாராவிதமாக லாரியும், டெம்ேபாவும் நேருக்கு நேர் மோதின. இதில் டெம்போவின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. டெம்போவில் இருந்த முருகன், டிரைவர் எப்சன் ராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கினர். இதில் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும், இந்த விபத்தில் லாரியில் இருந்த டிரைவர் கண்டத்து விளையை சேர்ந்த ஜெகன் (31) மற்றும் திக்குறிச்சியை சேர்ந்த டென்னிசன் (53), திருவட்டார் முவாற்றுமுகத்தை சேர்ந்த கணேசன் (52), முக்கம்பாலவிளையை சேர்ந்த சேகர் (35), சிதறால் காட்டுவிளையை சேர்ந்த சிரோன்மணி ( 50) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து நடந்த போது அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்ததால் மீட்பு பணி தாமதமானது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்- இன்ஸ்பக்டர் தினேஷ்குமார் மற்றும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான முருகனுக்கு புஷ்பலதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். விபத்தில் கோழிக்கடைக்காரர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.